இந்தியன் வங்கியில்  138 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

இந்தியன் வங்கியில்  138 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 138 உதவி மேலாளர், மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற பணியிடத்திற்கு ஆள்தேர்வு செய்தலுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 138

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


1. Assistant Manager Credit - 85
சம்பளம்: மாதம் ரூ.23700 - 42020

2. Manager Credit - 15
3. Manager Security -15
4. Manager Forex - 10
5. Manager Legal - 02
6. Manager Dealer - 05
7. Manager Risk Management - 05
சம்பளம்: மாதம் ரூ.31705 - 45950

8. Senior Manager Risk Management - 01
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51490

தகுதி: வணிகம், மேலாண்மை, நிதி, வங்கி போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுககு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 20 முதல் 37க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indianbank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2020

No comments:

Post a Comment