143 துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 28, 2020

143 துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு

:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 143 துறைதேர்வுகளை கடந்த 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னை மற்றும் டெல்லியில் உள்ள 33 தேர்வு மையங்களில் நடத்தியது.


 இந்த துறைதேர்வுகளின் வினாத்தாள்கள், கொள்குறி வகையை சார்ந்த தேர்வுகளின் வினாத்தாட்களுடன் கூடிய உத்தேச விடைகள் மற்றும் விரிந்துரைக்கும் வகை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

துறை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள், அவர்கள் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.


 உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரர் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக்கொள்ளப்படாது.

No comments:

Post a Comment