புத்தாண்டு தினம் :உலக அளவில் முதல் இடம் பிடித்த இந்தியா:2,000 கோடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 4, 2020

புத்தாண்டு தினம் :உலக அளவில் முதல் இடம் பிடித்த இந்தியா:2,000 கோடி

கடந்த புத்தாண்டு தினத்தன்று 24 மணி நேரத்தில் உலகம் முழுவதிலும் வாட்ஸ்அப்பில் 10 ஆயிரம் கோடி வாழ்த்து செய்திகள் பரிமாறி கொள்ளப்பட்டுள்ளன. இதில், 2 ஆயிரம் கோடி வாழ்த்துகளை பகிர்ந்து இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.



‘வாட்ஸ்அப்’ செயலி கடந்த  10 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அப்போது, ‘வாட்ஸ்அப்’ என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்குதான் அது இருந்தது. இப்போது, இது இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு செல்போன் பயன்படுத்தும் மக்கள் சென்று விட்டனர். 


தற்போது உலகளவில், வாட்ஸ்அப்பை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.



இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த புத்தாண்டு தினத்தன்று வாழ்த்து செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதில் மிகப்பெரிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அன்றைய தினம், அதாவது டிசம்பர் 31ம் தேதி தொடங்கி மறுநாள் வரையில் உலகளவில் வாட்ஸ்அப் மூலமாக 10 ஆயிரம் கோடி வாழ்த்து செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.


 இதில், 1,200 கோடி புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகளாகும். மற்றவை அனைத்தும் வாழ்த்துச் செய்திகள். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொண்டதில், உலகளவில் இந்தியர்கள்தான் முதலிடம் பிடித்துள்ளனர்.




 இவர்கள் மொத்தம் 2 ஆயிரம் கோடி வாழ்த்து செய்திகளை பரிமாறி உள்ளனர். உலகளவில் பரிமாறி கொள்ளப்பட்ட மொத்த வாழ்த்துச் செய்தியில் இது ஐந்தில் ஒரு பங்காகும். வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment