ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்துக்காக அன்று உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ளது திருஉத்திரகோசமங்கை. இங்கு அருள்மிகு மங்களநாதசுவாமி கோயில் உள்ளது. இதன் ஆருத்ரா தரிசனம் பெரு விழா வரும் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசன விழாவுக்காக வரும் 9 ஆம் தேதி ஒரு நாள் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வியாழக்கிழமைக்குப் பதிலாக வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
உள்ளூா் விடுப்பானது செலவாணி முறிச்சட்டப்படி அறிவிக்கப்படவில்லை.
வரும் 9 ஆம் தேதி வியாழக்கிழமையன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசுஅலுவலகங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment