அண்ணா பல்கலையில், செமஸ்டர் தேர்வுகள் இன்று துவங்க உள்ளன. குளறுபடியை தடுக்க, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில், ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், மே மாதங்களிலும், டிசம்பரிலும், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு, டிசம்பரில் நடக்க வேண்டிய தேர்வு, நவம்பரிலேயே துவக்கப்பட்டது.
தேர்வுகள் முடியவிருந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் வலுவடைந்தது. அதனால், நாடு முழுவதும், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க, மத்திய உள்துறை சார்பில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்திலும், டிசம்பர் மூன்றாவது வாரம் முதல், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலையில் திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தொடர்ந்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கல்லுாரிகளின் விடுமுறை காலம் முடிந்து, பல்கலைகள் செயல்பட துவங்கி உள்ளன. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இன்று முதல் மீண்டும் தேர்வுகள் துவங்க உள்ளன; 10ம் தேதி வரை நடக்கின்றன. இதில், எந்த குளறுபடியும் இன்றி தேர்வுகளை நடத்த, கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே தேர்வுகள் நடந்த போது, பழைய பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட, பழைய வினாத்தாள்களும், பிழைகளுடன் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களும் வழங்கப்பட்டதால், குளறுபடி ஏற்பட்டது. இந்த தேர்வின் போது, தவறுகளை தடுக்கும் வகையில், முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை, அண்ணா பல்கலை மேற்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment