8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பதிவு துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 3, 2020

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: பதிவு துவக்கம்

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள், ஜன., 27 முதல் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.




தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஏப்ரலில் நடக்க உள்ள எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, இந்த ஆண்டு, ஜன., 1ல், 12 ஆண்டு, ஆறு மாதங்கள் வயது பூர்த்தி அடைந்த, தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 



வரும், 27ம் தேதி முதல், 31ம் தேதிக்குள், தேர்வுத்துறை சேவை மையங்கள் வழியே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 




தேர்வு கட்டணமாக, 125 ரூபாய் மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக்கான விரிவான தகவல்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment