2020 குரூப் 1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 1, 2020

2020 குரூப் 1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

2020ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது.


2018 -19ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதே சமயத்தில் 2020ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி  வெளியிட்டுள்ளது.

குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை 2020 ஜனவரி மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்திருந்த நிலையில், வருகிற ஜனவரி 20ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற பிப்ரவரி 19ம் தேதி என்றும், எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்த விரிவான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம்.

No comments:

Post a Comment