எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், ஜனவரி 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரியை ஒரே நேரத்தில் ஏராளமானோர் அணுகியதால், ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, விண்ணப்பிக்க இயலாமல் போனவர்களின் வசதிக்காக, இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை மாலையோடு விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகழாண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தேர்வினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் பேர் தேர்வெழுதியிருந்தனா்.
அவா்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனா்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெற்றது.

No comments:
Post a Comment