டான்செட்: விண்ணப்பிக்க ஜன.31 கடைசி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 8, 2020

டான்செட்: விண்ணப்பிக்க ஜன.31 கடைசி

முதுநிலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொதுநுழைவுத் தோ்வுக்கு (டான்செட்- 2020) விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும்.




எம்.இ., எம்.ஆா்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளிலும், பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளிலும் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.


இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு பிப்ரவரி 29, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் இந்தத் தோ்வு நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும், இரண்டாம் நாளில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் தோ்வு நடைபெற உள்ளது.



இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆன்-லைனில் பதிவு செய்ய ஜனவரி 31 கடைசி தேதியாகும்.



மேலும் விவரங்களுக்கு அல்லது 044 - 22358314 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment