பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு, பிப்., 3 முதல் செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிப்., 14 முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.
அரசு தேர்வு துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பொது பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, பிப்., 3 முதல், 13 வரை இந்த தேர்வை நடத்த வேண்டும். பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிப்., 14 முதல், 25 வரை செய்முறை தேர்வு நடத்தப்படும்
. பிளஸ் 2வுக்கு, செய்முறை தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல் படிவத்தை, வரும், 27ம் தேதி முதல், பிப்., 12 வரை; பிளஸ் 1க்கு, ஜன., 31 முதல், பிப்., 24 வரையிலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
அரியர் மாணவர்கள்பிளஸ் 1 படித்து, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள்; பிளஸ் 1ல் மாற்று சான்றிதழ் பெற்று இடைநின்றவர்கள், வேறு பள்ளியில் பிளஸ் 1 படித்து, தற்போது மற்றொரு பள்ளியில், பிளஸ் 2 சேர்ந்தவர்கள் ஆகியோர், பிளஸ் 1 அரியர் தேர்வு எழுதுவதாக இருந்தால், அவர்களுக்கு, பிப்., 25க்குள் தனியாக செய்முறை தேர்வு நடத்த வேண்டும்.
முதன்மை கண்காணிப்பாளர் தலைமையில், புற தேர்வு கண்காணிப்பாளர்களாக, வேறு பள்ளி ஆசிரியர்களும், அக மதிப்பீட்டு தேர்வுக்கு கண்காணிப்பாளர்களாக, அதே பள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும்.
உதவியாளர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், குடிநீர் வழங்குபவர் போன்ற ஊழியர்களும் நியமிக்கப்பட வேண்டும். உயிரியல் பாடம், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தனியாக மதிப்பெண் குறிப்பிட வேண்டும்.
இயற்பியல் செய்முறை தேர்வில், அறிவியல் கால்குலேட்டர் மட்டும் அனுமதிக்கலாம். இந்த தேர்வை, அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்தப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment