போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு தேதி மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 8, 2020

போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு தேதி மாற்றம்



 காவல் துறையில், எஸ்.ஐ., பணிக்கு, வரும், 11ம் தேதி அறிவிக்கப் பட்டிருந்த எழுத்து தேர்வு, வரும், 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.காவல் துறைக்கு, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்ற, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 2019, மார்ச்சில் அறிவித்தது.






இந்த தேர்வுக்கு, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில், காவல் துறையில் பணியாற்றுவோரை ஒரு பிரிவினராகவும், மற்றவர்களை பொதுப்பிரிவினர் எனவும், வகைப்படுத்தி உள்ளனர்.இதையடுத்து, தகுதியான விண்ணப்பதாரர்களில், காவல் துறையினருக்கு, வரும், 11ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கு, 12ம் தேதியும், எழுத்து தேர்வு நடைபெறும் என, சீருடை தேர்வு குழுமம் அறிவித்து இருந்தது.





இந்த தகவல், விண்ணப்பதாரர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து தேர்வுக்கு, மாநிலம் முழுவதும், 32 இடங்களில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' சீருடை பணியாளர் தேர்வு குழுமம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது.






இந்நிலையில், வரும், 11ம் தேதி நடத்த இருந்த காவல் துறையினருக்கான எழுத்து தேர்வு, 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது; 12ம் தேதி தேர்வில் எந்த மாற்றமும் இல்லை.மேலும், சென்னை அண்ணா பல்கலையில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தேர்வு மையம், மதுரவாயலில் உள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.






எனவே, அண்ணா பல்கலையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் தேர்வு எழுதலாம்.மற்ற தேர்வு மையங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. 'விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்' என, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment