புதிய எம்ஆதார் செயலி மூலம் 35 வகையான சேவைகளைப் பெறலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 3, 2020

புதிய எம்ஆதார் செயலி மூலம் 35 வகையான சேவைகளைப் பெறலாம்

டிஜிட்டல் மயத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட எம்ஆதார் செயலி கடந்த ஆண்டு இறுதியில் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.


இந்த எம்ஆதார் மூலம் கிட்டத்தட்ட 35 வகையான ஆதார் தொடர்பான சேவைகளை ஒரு பயனாளர் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயணத்தின் போது ஒரு பயனாளர் தங்கள் கைவசம் ஆதார் அட்டையை வைத்திருக்காவிட்டாலும் கூட, தங்களது அடையாளத்தை நிரூபிக்க முடியும் எம்ஆதார் இருந்தால்.


மேலும், ஆதார் அட்டையை டவுன்லோடு செய்வது, ஆதார் மையங்கள் எங்கே இருக்கிறது என்ற விவரங்களை அறிவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.



தற்போது எம்ஆதார் செயலி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் உள்ளது.முகவரி மாற்றம், ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைப்பது உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment