SBI வங்கியில் 8000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 3, 2020

SBI வங்கியில் 8000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8 ஆயிரம் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவ இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Associate
காலியிடங்கள்: 8000 (தமிழகத்திற்கு 393 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
தகுதி: 01.01.2020 தேதியின்படி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்


.சம்பளம்: மாதம் ரூ.13075 - 31450 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: General, OBC, EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.01.2020

No comments:

Post a Comment