இன்னும் 3 மாதத்தில் லஞ்சம் என்பதே இருக்கக் கூடாது: முதல்வர் ஜெகன் அதிரடி உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 3, 2020

இன்னும் 3 மாதத்தில் லஞ்சம் என்பதே இருக்கக் கூடாது: முதல்வர் ஜெகன் அதிரடி உத்தரவு

ஆந்திர மாநில அரசு துறைகளில் இன்னும் 3 மாதத்தில் லஞ்சம் என்பதே இருக்கக் கூடாது,’’ என்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


 ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேபல்லியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன் மோகன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

 அப்போது அவர் பேசியதாவது: அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெற வேண்டும் என்றால் அச்சம் ஏற்பட வேண்டும். 


இதற்காக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், அரசு சார்பில் ‘14400’ என்ற இலவச தொலைபேசி எண் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த மூன்று மாதங்களில் மக்களின் புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை.


மேலும், கடந்த நவம்பர் மாதம் அகமதாபாத் ஐஐஎம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை இணைந்து ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதற்காக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை. எனவே, இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் அரசு துறைகளில் லஞ்சம் பெறுவது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.



குறிப்பாக, வருவாய் மற்றும் நகராட்சிகள் துறையில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இவற்றின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும். அதற்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து தர அரசு தயாராக உள்ளது. 


ஆனால், அரசு துறைகளில் ஊழல் மட்டும் இருக்கக் கூடாது. இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அதற்குள் உரிய பலன் கிடைக்கும் விதமாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment