தனியார் பள்ளியில் 4.85 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு 3,000 பணியிடங்கள் பறிபோகும் அபாயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 7, 2020

தனியார் பள்ளியில் 4.85 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு 3,000 பணியிடங்கள் பறிபோகும் அபாயம்

தமிழகத்தை பொறுத்தவரையில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறி வருகிறது.



 ஆனால் முரண்பாடாக கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களையும் கல்வித்துறையே ஊக்குவித்து வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து அதற்கான செலவை அரசே செய்கிறது.


 இந்த சட்டத்தின் மூலம் கடந்த ஆண்டுகளில் 25 சதவீத அடிப்படையில் கடந்த 2013-14ம் ஆண்டில் 49,864, 2014-15ல் 86,729, 2015-16ல் 94,811, 2016-17ல் 97,506, 2017-18ல் 90,607, 2018-19ல் 66,269 மாணவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 786 மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


 இவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது என்று கல்வி அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேற்கண்ட 4 லட்சத்து 85 ஆயிரத்து 786 மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு தலா 25 ஆயிரம் அரசு செலவு செய்கிறது. இதன்படி பார்த்தால் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 1214 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் அரசு செலவிட்டுள்ளது.



இந்த தொகை தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறையே அளித்துள்ளது. இந்த நிதியை அரசுப் பள்ளிகளுக்கு செலவு செய்ய அரசு மறுக்கிறது.


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இதுபோல அரசு செலவு செய்து தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருவதால், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து தனியார் பள்ளிகளுக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


 மாணவர்கள் குறைவாக இருக்கும் அரசுப் பள்ளிகளில் அதிகமாக இருக்கும் ஆசிரியர்களை கல்வித்துறை குறைத்து வருகிறது. இதனால், 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.


 ஆசிரியர்களின் நலனும் பாதிக்காத வகையில் கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அரசு பள்ளிகளின் கட்டமைப்புக்கு அந்த பணத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source;Dinakaran website

No comments:

Post a Comment