பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 7, 2020

பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை :



 பொங்கல் பண்டிகை முன்னிட்டு 10ம் ேததி மாலை 6.50 மணிக்கு எழும்பூரில் இருந்து நெல்லைக்கும், 11ம் தேதி இரவு 11.50 மணிக்கு எழும்பூரில் இருந்து நெல்லைக்கும், 12ம் தேதி இரவு 7.20 மணிக்கு தாம்பரத்திலிருந்து நெல்லைக்கும், 13ம் தேதி இரவு 7 மணிக்கு தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கும், 20ம் தேதி காலை 11.20 தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.



மறு மார்க்கத்தில் 11ம் தேதி இரவு 6.15 மணிக்கு நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கும், 12ம் தேதி இரவு 6.15 மணிக்கு நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கும், 14ம் தேதி காலை 10.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும், 19ம் தேதி இரவு 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும்சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

No comments:

Post a Comment