அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் 6000 ஹைடெக் ஆய்வகங்களை கண்காணிக்க கமிட்டி: பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 7, 2020

அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் 6000 ஹைடெக் ஆய்வகங்களை கண்காணிக்க கமிட்டி: பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு பள்ளிகளில் அமைக்கப்படும், 6,000, 'ஹைடெக்' ஆய்வகங்களை கண்காணிக்க, மாவட்ட கமிட்டி அமைக்கும்படி, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து, மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள, 3,090 அரசு உயர்நிலை பள்ளிகள், 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஹைடெக் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப் படுகின்றன.




 இந்த பணிகள், 'எல் அண்ட் டி' நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப் படுகின்றன. ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும், 10 கணினி மற்றும், 12 உபகரணங்களும்; 



ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும், 20 கணினி மற்றும், 12 உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த பணியை ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்து மேற்கொள்ள வேண்டும்.




அதேபோல், மாவட்ட வாரியாக ஆய்வு கமிட்டி அமைக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், இந்த கமிட்டி அமைய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment