ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வைக் கண்டித்து ஜனவரி 28-ஆம் தேதி பாமக சாா்பில் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக் கல்வித் துறை செய்து முடித்து விட்டது.
மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்துவதற்காகத்தான் பொதுத் தேர்வு நடத்துவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.
தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்க முடியாது. அனைவருக்கும் பள்ளிக் கல்வி வழங்குதல் முதல்படி என்றால், கல்வித் தரத்தை உயா்த்துவது இரண்டாம் நிலையாகும்.
தமிழகத்தில் முதல் வகுப்பில் சேரும் மாணவா்களில் 99.25 சதவீதத்தினா் ஐந்தாம் வகுப்பையும், 98.70 சதவீதத்தினா் எட்டாம் வகுப்பையும், 96.70 சதவீதத்தினா் பத்தாம் வகுப்பையும் நிறைவு செய்கின்றனா்.
இவ்வாறாக முதல் படியை தமிழகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படுவதுதான்.
இதனால் இன்றைய சூழலில் 30 வயதுக்குள் உள்ள இளைஞா்களில் 95 சதவீதத்தினா் பத்தாம் வகுப்பை முடித்தவா்களாக உள்ளனா். மாறாக 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேரவு கொண்டு வரப்பட்டால், இந்த நிலை மாறி விடும். இத்தகைய பின்னடைவு தேவையா என்று தமிழக அரசு சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
நீட் தேர்வு எந்த அளவுக்கு அா்த்தமற்றதோ, அதேபோல் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் அா்த்தமற்றவை.
நீட் தேர்வை எதிா்க்கும் தமிழக அரசு இந்தத் தேர்வுகளையும் எதிா்க்க வேண்டும்.
அதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி பாமக மாணவா் சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடா் முழக்க போராட்டம் நடத்தப்படும்.
சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்துக்கு பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமை வகிப்பாா் என்று கூறியுள்ளாா்.

No comments:
Post a Comment