முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 7 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 4, 2020

முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 7

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 வரும் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 இதனால் இந்த ஓஎஸ்-ஐ பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு விண்டோஸ்10 என்ற ஒஎஸ் அறிமுகம் செய்யப்பட்டாலும் இன்னும் பலர் விண்டோஸ்7 ஒஎஸ்-ஐ அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.



 பயன்படுத்துவதற்கு மிகவும் எளிது என்பதே இதன் ஒரே காரணமாக இருந்து வருகிறது இந்நிலையில் விண்டோஸ்7 மென்பொருளின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.




 இதனால் 14ஆம் தேதிக்கு பின் விண்டோஸ் 7 கம்ப்யூட்டர்கள் இயங்குமா? என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது.விண்டோஸ் 7 ஒஎஸ் உள்ள கம்ப்யூட்டர் வழக்கம்போல் இயங்கும் என்றும்


 ஆனால் அதை பயன்படுத்தும்போது மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது சரி செய்யப்படாது எனவும் மைக்ரோசாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.



 மேலும் விண்டோஸ்7-ன் ஒரிஜினல் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே விண்டோஸ்10 மென்பொருளை அதன் இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment