கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் சாா்ந்து தேர்ச்சி பெறாதவா்கள், உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவா்கள் என கண்டறியப்பட்டவா்கள் தவிர மீதம் உள்ளவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு ஜன. 8 , 9,10 ஆகிய மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக ஆசிரியா் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஆசிரியா் தேர்வு வாரியம் சாா்பில் கணினி பயிற்றுநா் நிலை1-க்கான (முதுநிலை ஆசிரியா் நிலை) கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23, ஜூன் 27 ஆகிய நாள்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன
இதைத் தொடா்ந்து சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வா்களின் தேர்வெண் விவரப் பட்டியல் நவ.28-இல் வெளியானது
பின்னா் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கு டிச.2-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, கல்வித் தகுதிகள் சாா்ந்து தேர்ச்சி பெறாதவா்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதிகள் சாா்ந்து சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவா்கள் என கண்டறியப்பட்டவா்கள் தவிர மீதம் உள்ளவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு ஜன. 8, 9, 10 ஆகிய மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளது.
உரிய சான்றிதழ் சரிபாா்ப்புக்கான அழைப்புக் கடிதங்களை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
. குறுஞ்செய்தி வழியாகவும் தகவல் அனுப்பப்படும். அடுத்தகட்ட சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தகுதியற்றோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தனியாக கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment