பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனவா என்பதை அறிய முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 10, 11, 12 ஆகிய 3 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்பாடுகளெல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுடைய விவரங்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டுமென்று ஏற்கனவே பலமுறை பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இருந்தாலும் கூட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் விவரங்களை 250 பள்ளிகள் தேர்வுத்துறைக்கு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தி உடனடியாக மாணவர்களின் விவரங்களை அளிக்க வேண்டுமென்று தேர்வுத்துறை 2 தினங்களுக்கு முன்பாக மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தற்போது வரை 200 பள்ளிகள் அந்த மாணவர்களின் விவரங்களை அளிக்காமல் இருக்கின்றனர்.
மேலும் வரக்கூடிய புதன்கிழமையை இறுதி கெடுவாக அறிவித்து மாணவர்களின் விவரங்களை உடனடியாக அனுப்பவேண்டும் என்று தெரிவித்திருக்கக்கூடிய தேர்வுத்துறை,
இந்த விவகாரத்தில் தனியார்துறை விதிமீறல்களில் ஈடுபடுகின்றனவா என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறது.
ஏனெனில் கடந்த காலங்களில் சரியாக படிக்காமல் தேர்வு எழுதினால் தோல்வி அடையக்கூடிய மாணவர்களை கணக்கெடுத்து அவர்களை தனித்தேர்வர்களாக எழுதவைக்கக்கூடிய முறைகேடுகளெல்லாம் நடந்திருக்கிறது.
இதுபோன்ற விதி மீறல் இப்போது நடந்து விடக்கூடாது என்றும், மேலும் இது போன்ற செயலில் ஈடுபடும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத தகுதிபெற்றவர்கள் என்றும் ஆகையால் யாரையும் ஒதுக்கக்கூடாது என்றும் தேர்வுத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment