ஆப்சென்ட்' மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

ஆப்சென்ட்' மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி

'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் 75 சதவீத வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி கடிதம் பெற வேண்டும்' என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுளளது.





தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச்சில் நடக்க உள்ளது. தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்கள் பெறப்பட்டு தேர்வு மையங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் வருகை பதிவு குறைந்த மாணவர்கள் தனியாக அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 





பள்ளி வேலை நாட்களில் 75 சதவீதம் குறைவாக வருகை தந்த மாணவர்களால் பொதுத்தேர்வை எழுத முடியாது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அந்த மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என தேர்வுத்துறை கூறியுள்ளது

No comments:

Post a Comment