ஆசிரியர் காலி பணியிடங்கள் 'சரண்டர்' செய்ய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

ஆசிரியர் காலி பணியிடங்கள் 'சரண்டர்' செய்ய உத்தரவு

'அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண்டர் செய்ய வேண்டும்' என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.





இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் பாட வாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட இடங்களை பொது தொகுப்புக்கு ஒப்படைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. அனைத்து அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளிலும் இதற்கான பட்டியலை பெற்று இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். 





அதன்படி ஆசிரியர்களின்றி உள்ள உபரி பணியிடங்களை வருங்காலங்களில் காலியிடங்களாகவோ அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருதக்கூடாது. சரண் செய்யப்பட்ட இடங்களை பள்ளிகளின் பதிவேடுகளில் பொது தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டது என குறிப்பிட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment