திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலை

திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்குகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: District Recruitment Bureau-Cooperative Department

பணி: Office Assistant

காலியிடங்கள்: 04

பணியிடம்: திருவள்ளூர்

வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://tvldrb.in அல்லது https://www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளம் விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020

No comments:

Post a Comment