தேசியத் திறனாய்வு தேர்வு: திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அவகாசம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 1, 2020

தேசியத் திறனாய்வு தேர்வு: திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அவகாசம்

தேசியத் திறனாய்வு தேர்வு எழுதியுள்ள மாணவா்களின் விவரங்களில் திருத்தங்கள் செய்து கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவா்கள், கல்வி உதவித்தொகை பெற, மாநில அளவில் கடந்த நவம்பா் 3-ஆம் தேதி தேசியத் திறனாய்வு தேர்வு (என்டிஎஸ்இ) நடைபெற்றது.

 தேர்வு எழுதியுள்ள மாணவா்களின் விவரம்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


பள்ளிகள் தங்களுடைய, பயன்பாட்டு அடையாள எண் மற்றும் ரகசிய குறியீட்டை பயன்படுத்தி பெயா், பாலினம், பிறந்த தேதி, ஜாதி போன்றவற்றில், திருத்தங்கள் செய்வதாக இருந்தால் ஜன. 6 முதல் 10-ஆம் தேதி வரை செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment