இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவிக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 71 குடியரசு தினத்துக்கு முந்தைய தினமான இன்று சனிக்கிழமை (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்டன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால் அவுஜா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீஃப், கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சி, ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா ஆகியோர் என 21 பேர் பத்ம விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், அறுவைச் சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, கண் மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.வி. ரமணி, இசைக் கலைஞர் "டிரம்ஸ்' சிவமணி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், நடிகர் பிரபுதேவா ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
முன்னாள் வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோரும் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கிரிக்கெட் வீரர் கெüதம் கம்பீர், பிரபல கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பத்ம விருதுக்கு 50,000 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment