BSNL வழங்கும் குடியரசு தின சலுகை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 25, 2020

BSNL வழங்கும் குடியரசு தின சலுகை


71வது குடியரசு தினத்தையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மொபைல் சேவையில் சிறப்புச் சலுகையை அறிவித்து உள்ளது.

அதன்படி, பிளான் ரூ.1,999ன் வேலிடிட்டியை 345 நாட்களுக்கு பதிலாக 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்களுக்கு வழங்குகிறது.


ரூ.1,999 பிளானில் தினம் மூன்று ஜீ பி டேட்டாவும் அளவில்லா அழைப்புகளும், 100 குறுஞ்செய்தி வசதிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளான் 1999ல் பிஎஸ்என்எல் டியூன் மற்றும் பிஎஸ்என்எல் டீவி சந்தா 365 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும். இச்சலுகை 26 ஜனவரி 2020 முதல் 15 பிப்ரவரி 2020 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்குக் கிடைக்கும்


சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல்லை மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட அதிக நம்பிக்கையுடனும் ஆர்வத்துடன் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (எம்என்பி) மூலம் தேர்வு செய்கின்றனர். டிராயின் அறிக்கைப்படி பிஎஸ்என்எல்லின் வயர்லெஸ் சந்தை பங்கு நவம்பர் 2019ல் இந்திய அளவில் 10.19%, மற்றும் பிஎஸ்என்எல் உரிமம் பெற்ற ஏரியாக்களில் (மும்பை மற்றும் டெல்லி தவிர) 11.07% ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் பிஎஸ்என்எல் குறைத்த கட்டணத்தில் சிறப்பான சேவையை சந்தாதாரர்களுக்கு வழங்க உள்ளது

No comments:

Post a Comment