பள்ளிகளில் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 24, 2020

பள்ளிகளில் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு

குடியரசு தினவிழாவை அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


 அனைத்து வகை பள்ளிகளிலும் மிக சிறப்பான முறையில் ஜனவரி 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினவிழாவை மகிழ்ச்சியும் எழுச்சியும் மிக்க விழாவாகக் கொண்டாட வேண்டும்.

பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்களினாலும், மலா்களாலும் நன்கு அலங்கரிக்க வேண்டும். பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.


 கிராமக்கல்வி குழு உறுப்பினா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பள்ளி புரவலா்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும்.


தேசியக் கொடியை காட்சிப்படுத்தும் போதும், பயன்படுத்தும் போதும் பிளாஸ்டிக் கொடியாக இருக்கக் கூடாது. அதேபோன்று தேசியக் கொடியை தலைகீழாகவோ, கிழிந்த கொடிகளை ஏற்றவோ கூடாது. இதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் சுற்றறிக்கையாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பி குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment