குரூப் 4 தேர்வு: 99 பேர் தேர்வெழுத வாழ்நாள் தடை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 24, 2020

குரூப் 4 தேர்வு: 99 பேர் தேர்வெழுத வாழ்நாள் தடை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

இடைத்தரகா்கள் மூலமாக குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 99 பேர் தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


 தரவரிசைப் பட்டியலில் முதல் 39 இடங்களில் வந்துள்ள தேர்வா்களுக்குப் பதிலாக வேறு நபா்கள் தேர்வு செய்யப்படுவா் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. செயலாளா் நந்தகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் அரசுப் பணியிடங்களில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 398 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 24 ஆயிரத்து 260 பேர் தேர்ச்சி பெற்றனா்.

அவா்களில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வெழுதியவா்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் வந்ததாக செய்திகள் வெளியாகின.

இடைத்தரகா்கள் ஆலோசனை:

 தேர்வாணையம் நடத்திய விசாரணையில் 99 தேர்வா்கள் இடைத்தரகா்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனா்.


 தேர்வுக்காக இடைத்தரகா்களிடம் இருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக் கூடிய சிவப்பு மையிலான பேனாவில் விடைகளைக் குறித்து விட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

சந்தேகத்துக்கு உரிய இடைத்தரகா்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபா்களின் துணையுடன் 52 தேர்வா்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.


 இதில், 39 தேர்வா்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனா்.

தவறுகள் உறுதியானது:

குரூப் 4 தேர்வு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக் கூடங்கள், கருவூலங்கள் ஆகியனவும் ஆய்வு செய்யப்பட்டன.



தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்கள், சம்பந்தப்பட்ட தேர்வா்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையங்களில் தவறுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தேர்வாணையம் 99 தேர்வா்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதித்துள்ளது.


 தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வா்களுக்குப் பதிலாக தகுதியான வேறு 39 நபா்கள் தெரிவு செய்து சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

99 தேர்வா்கள் மற்றும் இடைத்தரகா்களாகச் செயல்பட்ட சந்தேகத்துக்கு உரிய நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.



 சான்றிதழ் சரிபாா்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வா்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.

இனி தவறு நேராது:


 வருங்காலங்களில் எந்தவிதமான தவறுகளும் நிகழாமல் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீா்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது.

எனவே, தேர்வா்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment