வனக்காப்பாளர் பணிக்கு ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 24, 2020

வனக்காப்பாளர் பணிக்கு ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுக்கு, ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகளை, வனத்துறை வெளியிட்டுள்ளது.


வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, விரைவில் நடக்க உள்ளது.


 தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்வது, இன்று துவங்கி, பிப்., 14 வரை நடைபெற உள்ளது. வனத்துறை இணையதளத்தில், இதற்கான பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் உள்ள, இ - சேவை மையங்கள் வாயிலாகவும், விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதற்கான நடவடிக்கையையும், வனத்துறை எடுத்துள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்கள் விபரங்களை உள்ளீடு செய்வது, ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைப்பது, கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை, இணையதளத்தில் வனத்துறை வெளியிட்டுள்ளது.


தவறான விவரங்கள், போலி சான்றுகள் உள்ளீடு செய்யப்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும், வனத்துறை எச்சரித்துள்ளது

No comments:

Post a Comment