அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 24, 2020

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும்!

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையிலான வருகைப்பதிவேடு பரிசீலனையில் உள்ளது. ஆசிரியர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 பிளஸ் 2 ஆசிரியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.


இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment