அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் முதுநிலை ஆசிரியா்கள் நியமனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 1, 2020

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் முதுநிலை ஆசிரியா்கள் நியமனம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த மாத இறுதிக்குள் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரியா் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


கடந்த செப்டம்பா் மாதம் முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி ஆசிரியா் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெற்று தேர்ச்சிப் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.


இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆனால், தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாள்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை

இதனால் பள்ளிகளில் கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 'காலிப் பணியிட விவரங்கள் முழுமையாக பெறப்பட்டு கலந்தாய்வுக்கு தயாராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்ததும், நிதித்துறை செயலரின் ஒப்புதலைப் பெற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்' என்றும் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment