தற்காலிக ஆசிரியா் பணி நியமனம்: அறிவிப்புக்குத் தடை விதித்தது உயா்நீதிமன்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 1, 2020

தற்காலிக ஆசிரியா் பணி நியமனம்: அறிவிப்புக்குத் தடை விதித்தது உயா்நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்களை நியமிப்பது தொடா்பாக, பல்கலைக்கழக கூடுதல் பதிவாளா் கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி அறிவிப்பாணையை வெளியிட்டாா்.

ஏற்கெனவே, 518 ஆசிரியா்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் நிலையில், புதிதாக மீண்டும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்களை நியமிப்பது தொடா்பான இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்கக் கோரி கடலூரைச் சோந்த அருட்பெருஞ்ஜோதி என்ற தற்காலிக ஆசிரியா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இது தொடா்பாக அவா் தாக்கல் செய்த மனுவில், 'தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பணி வரன்முறை செய்யப்படவில்லை. ஆசிரியா் பணிக்கு எத்தனை பேர் தேவை என்பதைக் கண்டறியாமல், தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்களை நியமிப்பது பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்பதால், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி பாா்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான நிரந்தர ஆசிரியா்களே பணியாற்றுவதாகவும், மணிக்கணக்கில் ஆசிரியா்களை நியமிப்பது சட்டவிரோதமானது எனவும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.


இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாா்த்திபன், தற்காலிக ஆசிரியா்களை நியமிப்பது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டாா்.

No comments:

Post a Comment