புதிய கட்டண திட்டங்கள் ஏர்டெல் அறிவித்தது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 4, 2020

புதிய கட்டண திட்டங்கள் ஏர்டெல் அறிவித்தது

அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ரூ.1.5 ஜிபி டேட்டாவுடன் புதிய திட்டங்களை ஏர்டெல் அறிவித்துள்ளது.



ஏர்டெல் நிறுவனம் இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்திருக்கிறது. பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கான இந்தத் திட்டங்கள் ரூ.279 மற்றும் ரூ.379 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, ரூ.279க்கு ரீசார்ஜ் செய்தால், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ்கால்கள் மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் தினந்தோறும் 100 எஸ்எம்ஸ்எஸ் அனுப்பிக்கொள்ளலாம் எனவும், இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


இதேபோன்று ரூ.379க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 84 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ்கால்கள் பேசிக்கொள்ளலாம் என்றும், அத்துடன் 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும்.


மேலும், 900 இலவச எஸ்எம்எஸ்கள் அனுப்பிக்கொள்ளலாம். இதுதவிர ஃபாஸ்டாக்கில் ரூ.100 வரை கேஷ்பேக் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment