பட்ஜெட் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 22, 2020

பட்ஜெட் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

பட்ஜெட் என்ற வார்த்தை Bougette என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது.Bougette என்ற வார்த்தைக்கு 'தோல் பை' என பொருள். முன்பு ஒரு தோல்பையில் பட்ஜெட் குறித்த ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்து வந்து தாக்கல் செய்வார்கள். பின்னர் அது பட்ஜெட் என மாறியதாக கூறப்படுகிறது.


இந்திய அரசிய சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லுக்கு அரசின் ஆண்டு நிதி அறிக்கை என உள்ளது. அரசின் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கணக்கிடுவதால் இதனை பட்ஜெட் என கூறுகிறோம். அரசியல் சட்டப்பிரிவு 112ன் படி நாட்டின் ஆண்டு வரவு செலவு கணக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அப்படி அறிக்கையை தாக்கல் செய்ய குடியரசுத் தலைவரின் அனுமதி பெற வேண்டும்.

அதன்பின்னரே தான் பட்ஜெட் என்கிற நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அதுவே மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும்.


இதுவரை இந்தியாவில் 80 பட்ஜெட்களுக்கு மேல் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.பட்ஜெட் தயாரிப்பு மிகவும் பாதுகாப்பாகவும் , கவனமாகவும் நடைபெற்று வருகிறது.முன்பு பட்ஜெட் அச்சடிப்பு குடியரசு தலைவர் மாளிகையில் அச்சடிக்கப்படும்.அதன் பின்னர் டெல்லியில் மிண்டோ சாலையில் உள்ள பாதுகாப்பு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 1980-ம் ஆண்டிற்குப்பிறகு நிதியமைச்சக அலுவலகத்தில் உள்ள ஒரு பிரதேயேக பகுதியில் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பின் போது பாதுகாப்பாக இருக்க அச்சடிக்கப்படும் பணியில் ஈடுபடுவார்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அச்சடிக்கப்படும் பணியில் ஈடுபடுவார்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்க வைக்கப்பட்டு உண்ண உணவு , மேலும் அவர்களுக்கு தேவைகள் அனைத்தும் வசதிகளும் செய்து தரப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

No comments:

Post a Comment