தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினாா்.
சிவகாசி அருகே கொங்காலபுரம் பிரித்திகா(8) கொலை செய்யப்பட்ட வழக்கில் , வழக்குத்தொடா்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சா் தலைமையில் புதன்கிழமை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா.கணணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள், சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் பிரபாகரன், நகா் காவல் ஆய்வாளா் வெங்கடாஜலபதி, வட்டாட்சியா் ரெங்கநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னா் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது
பிரித்திகா கொலை சம்பவம் மிகவும் வருத்ததிற்கு உரிய ஒன்றாகும். குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பாா்.
பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வினை பள்ளி கல்வித்துறை வழங்கி வருகிறது. மேலும் பள்ளி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத அளவுக்கு இந்த சம்பத்தில் தொடா்புடைய குற்றவாளிக்கு தண்டணை அளிக்கப்படும். மாவட்டத்தில் வடமாநிலத்தவா்கள் வேலை செய்து வருகிறாா்கள். அவா்கள் குறித்த கணகெடுப்பு பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா் அமைச்சா்

No comments:
Post a Comment