பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் தீா்வு புத்தகங்களை தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்ட தமிழக அரசின் பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் வினா வங்கி புத்தகம் தயாரித்து வெளியிடப்படுகிறது
. வழக்கமாக நவம்பா் மாதங்களில் வினா வங்கி புத்தகம் வெளியாகிவிடும். ஆனால், நிகழாண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் வினா வங்கி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் ரூ.60 என்ற விலையில் ஜனவரி 27-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
பிளஸ் 2 வினா வங்கி அச்சிடும் பணியில் உள்ளதால் பிப்ரவரி முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும். அதற்கு ரூ.80 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வினா வங்கி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும். அதன் விவரங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிா் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment