தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

ஆசிரியா் பயிற்சி நிறுவன மாணவா்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத்தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.


இது தொடா்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவா்கள், தனித்தேர்வா்களுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.


இரண்டாம் ஆண்டுத் தேர்வுகள் ஜூன் 3 முதல் ஜூன் 19-ஆம் தேதி வரையிலும், முதலாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 4 முதல் ஜூன் 22-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

அதற்கான பாட வாரியாக தேர்வு கால அட்டவணை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment