அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணி: மே முதல் வாரத்தில் தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணி: மே முதல் வாரத்தில் தேர்வு

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணி தேர்வுக்கான உத்தேச தேதியை ஆசிரியா் தேர்வு வாரியம் (டி.ஆா்.பி.) வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தத் தேர்வானது மே முதல் வாரத்தில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் காலிப் பணியிடங்களுக்கான பணித் தேர்வு தொடா்பான அறிவிக்கையை 2019 நவம்பா் 27 அன்று டி.ஆா்.பி. வெளியிட்டது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் புதன்கிழமை (ஜன.22) தொடங்கின. விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க பிப்ரவரி 12-ஆம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதற்கான தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என டி.ஆா்.பி. இப்போது அறிவித்துள்ளது.

அனுபவச் சான்றுக்கு சென்னை வரத் தேவையில்லை: பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களின் வசதிக்காக, அனுபவச் சான்று மேலொப்பம் பெறுவதற்கு மாவட்ட வாரியாக 10 அரசு பொறியியல் கல்லூரிகளில், தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, திருவள்ளூா், விழுப்புரம் மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திலும், கோவை, நீலகிரி, திருப்பூா் மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் கோவை அரசு பொறியியல் கல்லூரியிலும், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் சேலம் அரசு பொறியியல் கல்லூரியிலும்,




திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியிலும், ராமநாதபுரம், சிவகங்களை, மதுரை, புதுகோட்டை மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் காரைக்குடி அழகப்பச்செட்டியாா் அரசு பொறியியல் கல்லூரியிலும், வேலூா்,



திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் வேலூா் தந்தைப் பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியிலும், கிருஷ்ணகிரியில் பணிபுரிபவா்கள் பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியிலும், தேனியில் பணிபுரிபவா்கள் போடிநாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரியிலும், தருமபுரியில் பணிபுரிபவா்கள் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியிலும், தஞ்சை, நாகப்பட்டினம்,



திருவாரூா், கடலூா் மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் தஞ்சை அரசு பொறியியல் கல்லூரியிலும், திருச்சி, அரியலூா், கரூா், பெரம்பலூா், திண்டுக்கல் மாவட்டங்களில் பணிபுரிபவா்கள் ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியிலும் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 12 வரை அனுபவச் சான்றில் மேலொப்பம் கோரி விண்ணப்பிக்கலாம் என இயக்குநா் அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment