விண்ணப்பத்தில் மதம் பற்றி குறிப்பிடாத 5 வயது சிறுவனை சேர்க்க மறுத்த பள்ளி.! விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை.. பின்னர் நடந்தது என்ன.? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 23, 2020

விண்ணப்பத்தில் மதம் பற்றி குறிப்பிடாத 5 வயது சிறுவனை சேர்க்க மறுத்த பள்ளி.! விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை.. பின்னர் நடந்தது என்ன.?


பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் மதத்தை பற்றிய விபரத்தை குறிப்பிடாததால், 1-ம் வகுப்பிற்கு மாணவனை சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதி நசீம் – தன்யா. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். இவரை, அங்குள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க நசீம் முடிவு செய்தார். இதற்காக, பள்ளியின் சேர்க்கை விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்தார். அதில், மதம் பற்றிய விபரத்தில், ‘மதம் இல்லை’ என நசீம் குறிப்பிட்டு கொடுத்துள்ளார்.

அந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், என்ன மதம் என்பதை குறிப்பிடவில்லையெனில், அவரது மகனை பள்ளியில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆனால், நசீமும் மதத்தை பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். பள்ளி நிர்வாகமும் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.



மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது, அவர்களின் மதம் பற்றி விபரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை என கேரள அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் உத்தரவையும் மீறி, மதத்தை பற்றி குறிப்பிட்டால் மட்டுமே, மகனுக்கு சீட்டு கொடுப்போம் என பள்ளி நிர்வாகம் ஒன்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் மூலமாக விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் நசீமை அழைத்து, மதத்தை குறிப்பிடாமல் மகனை பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தகவல் கேரள கல்வி மந்திரி ரவீந்திரநாத் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் இதுபற்றி விசாரணை நடத்தும்படி பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரும் விசாரணை நடத்தினார்.




இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் நசீமை தொடர்பு கொண்டு அவரது மகனை மதத்தை குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால், நசீமோ, அந்தப் பள்ளியில் தனது மகனை சேர்க்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டார்.

No comments:

Post a Comment