1 TO 9 "ஆல் பாஸ்" +2க்கு "மறு தேர்வு" ... தமிழக முதல்வர் உத்தரவு .!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 25, 2020

1 TO 9 "ஆல் பாஸ்" +2க்கு "மறு தேர்வு" ... தமிழக முதல்வர் உத்தரவு .!!


தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற அறிவிப்பை முதல்வர் அறிவித்தார்

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதாமல் விட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும்.

அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.


No comments:

Post a Comment