குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 எப்படி வழங்கப்படும்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 26, 2020

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 எப்படி வழங்கப்படும்?

 கொரோனா வைரஸ்  பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


வருகிற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்.15க்குள் ரூ.1000 ரொக்கம், இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் விநியோகம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை அடுத்து கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கை
ரூ.1000 ரொக்கம் மற்றும் இலவசமாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும்
அந்தவகையில் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 எப்படி வழங்கப்படும்? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-


முதல்-அமைச்சர் சட்டசபையில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். எப்படி வழங்கப்படும் என்பதையும் அவர் கூறினார். அதேபோல், அட்டைதாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் டோக்கன் கொடுக்கப்படும். அதில் எந்த தேதியில்? எந்த நேரம்? வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கும். அட்டைதாரர்கள் அந்த தேதியில் வந்து பெற்று கொள்ளலாம்.

மேலும், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் வரிசையில் நிற்க ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு அடையாளக்குறியிடவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment