ஆவின் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 26, 2020

ஆவின் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றும் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என்றும் ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இந்த நிலையில், தமிழகம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தனியார் பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என அறிவித்த நிலையில் ஆவின் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என்பதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது


.ஆவின் பாலகங்களுக்கு சென்று பொதுமக்கள் நேரடியாக தேவையான பாலை வாங்கிக்கொள்ளலாம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பால் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் நிர்வாகம்  விளக்கம் அளித்துள்ளது.       

No comments:

Post a Comment