10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 18, 2020

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் ' என, புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.




இதுகுறித்து, சங்க தலைவர் நாராயணசாமி, பொருளாளர் நாகராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாணவர்களின் நலன் கருதி, அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது


.தற்போதைய சூழலில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் அல்லது சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வாகும்





.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் தான் மருத்துவம், பொறியியல் போன்ற மேற்படிப்புகளுக்கு அடிப்படையாக உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு தமிழக அரசிடம் பேசி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment