மின் வாரியத்தில் பொறியாளர் வேலை 1 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 18, 2020

மின் வாரியத்தில் பொறியாளர் வேலை 1 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம்

மின் வாரியத்தில், உதவி பொறியாளர் வேலைக்கு, ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர்.



தமிழகத்தில், அதிக ஊதியம் தரும் அரசு நிறுவனமாக, மின் வாரியம் திகழ்கிறது. கள பிரிவு ஊழியர் முதல், தலைமை பொறியாளர் வரை அனைவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.இதனால், மின் வாரியத்தில் வேலைக்கு சேர, இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.



இந்நிலையில், எலக்ட்ரிகல் பிரிவில், 400; மெக்கானிக்கல் பிரிவில், 125; சிவில் பிரிவில், 75 என, மொத்தம், 600 உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு அறிவிப்பை, மின்வாரியம், பிப்., 15ல் வெளியிட்டது. 




அதற்கு விண்ணப்பிக்க, இம்மாதம், 16ம் தேதி வரையும்; பணம் செலுத்த, 19ம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டது. முதல் முறையாக, கணினி வழியில் நடத்தப்படும் எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.




இதற்கு, இளங்கலை இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், 16ம் தேதி முடிவடைந்த நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர்.தேர்வு கட்டணம் செலுத்த, இன்று வரை அவகாசம் இருப்பதால், நாளை தான், எத்தனை பேர் முழுமையாக விண்ணப்பித்து உள்ளனர் என்ற துல்லிய விபரம் தெரிய வரும். -

No comments:

Post a Comment