17 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் புதிய திட்டத்தை பள்ளி அளவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூனில் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட செயற்குழுக்களில் நடந்த விவாதங்களின் அடிப்படையில், புதிய திட்டங்களை செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
தற்போதைய முறைப்படி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஜனவரி 1ம் தேதி 18 வயதை எட்டியவர்கள், அந்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஆனால், புதிய திட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 18 வயதை எட்டியவர்களுக்கு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நான்கு தகுதி தேதிகளை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் தங்களை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கலாம்.
மேலும் 17 வயது பூர்த்தியாகி 18 வயதை தொடும்போதே மேற்கண்ட முறைப்படி வாக்காளர் பட்டியலில் எளிதாக தங்கள் பெயரை தாங்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்படும்.
தேர்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புதிய வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் இம்முறை கொண்டு வரப்படுகிறது. வாக்களிக்கும் உரிமை இருந்தும் எந்த வாக்காளருக்கும் 18 வயதை பூர்த்தியடையும்போது வாக்களிக்கும் உரிமையை இழக்கக் கூடாது.
தேர்தல் நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக முகவரி மாற்றம், பெயர்களை நீக்குவது போன்றவற்றுக்கான படிவங்கள் பல இருப்பதால், அதனை ஒற்றை படிவமாக அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. பல படிவங்கள் இருப்பதால், குழப்பத்தை உருவாக்குகின்றன. செயல்பாட்டை பாதிக்கின்றன. அதனால், அனைத்து சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த மற்றும் எளிமையான படிவம் கொண்டு வரப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தேர்தல் சேவைகளை அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காலதாமதம் மற்றும் செலவினங்களை குறைக்க ஆன்லைனில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் மின்னணு ஊடகங்களைப் போலவே அச்சு மற்றும் சமூக ஊடகங்களையும் ஒழுங்குபடுத்த தேர்தல் ஆணையம் சில பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment