குரூப் 1 முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 19, 2020

குரூப் 1 முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக குரூப் 1 முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணிக்கான முதல் நிலைத் தேர்வு வரும் ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தேர்வர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டு வரும் 4ம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இத் தேர்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment