ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் ஏப்.1ல் அமலாகிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 19, 2020

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் ஏப்.1ல் அமலாகிறது


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

எந்த இடத்திலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டம் பரிட்சார்த்த முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது.

 இந்த 2 மாவட்டங்களில் மொத்தம் 9 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள், அந்த மாவட்டங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் 9 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில் 9 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை.


 எனவே, இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும். இதன் மூலம் மாநிலத்தில் எந்த கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்ெகாள்ளலாம்.


இது, பொது விநியோக திட்டத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும்’ என்றார். தமிழகத்தில் தற்போது, 2.05 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 35233 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment