கொரோனா சிகிச்சை கூடமாகப் பயன்படுத்திக் கொள்ள எனது இருவீட்டை வழங்குகிறேன் என்று நடிகர் பார்த்திபன் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது
. இந்நிலையில், கொரோனா நடவடிக்கை தொடர்பாக நடிகர் பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர், எந்த நோய் வந்தாலும் அதற்கு மருந்து கொடுத்துச் சரி செய்துவிடலாம் என்பதை மீறி, கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிய நம் கவலை என்னவென்றால் அதற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய போதிய மருத்துவர்கள் நம்மிடம் இல்லை என்பதுதான்.
அதே போல போதிய இடவசதி, போதிய மருத்துவமனைகள் இல்லை என்பதுதான். அது தான் இருப்பதிலேயே பெரிய துயரமாக இருக்கிறது
.இத்தாலி போன்ற வசதியான நாட்டிலேயே அதைச் செய்ய முடியவில்லை எனும் போது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாட்டில் அதைச் செய்வது என்பது மிகமிக கடினமானது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்துத் தான் 24 மணிநேரமும் யோசித்துக் கொண்டே இருப்பதாகவும் நடிகர் பார்த்திபன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மேற்கொண்டு தனக்குத் தோன்றிய சில யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளாவதாகச் சொன்ன பார்த்திபன், போதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில் சில அவசரகால மருத்துவமனைகளை உருவாக்குவதற்காக நம்மால் சின்ன இடங்களை உருவாக்க முடியும். தெருமுனைகளில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில், அரசு கட்டடங்களில் நாம் சில சோதனை மருத்துவக் கூடங்களை உருவாக்கலாம். அதற்கு உதவியாக எனக்கு கேகே நகரில் சொந்தமாக உள்ள இரண்டு வீட்டை வழங்கத் தயாராக இருக்கிறேன்.
அந்த வீட்டை அவசரகால மருத்துவக் கூடமாக நிலைமை சரியாகும் வரை பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். என்னைப் போலவே பலரும் இரண்டு வீடுகள் வைத்திருப்பார்கள்.
அவர்களும் இதைப்போலக் கொடுத்து உதவினால் நிலைமையைச் சரியாக கையாள உதவியாக இருக்கும். இது யோசனைதான். தேவை என்றால் செயல்படுத்தலாம் எனக் கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ பதிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.


உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக........ வாழ்க பல்லாண்டு...
ReplyDeleteThank you have a healthy life sir
ReplyDelete