கூட்ட நெரிசலில் பஸ் பயணம் செய்தீர்களா... உங்களுக்கு 3 வார வீட்டு தனிமை அவசியம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 24, 2020

கூட்ட நெரிசலில் பஸ் பயணம் செய்தீர்களா... உங்களுக்கு 3 வார வீட்டு தனிமை அவசியம்


மதுரை சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் பஸ் பயணம் செய்தவர்களுக்கு மூன்று வாரம் வீட்டு தனிமை அவசியம். 



சமூக நலன் கருதி அவர்கள் இதனை கடைபிடிக்க வேண்டும்

.கொரோனாவிடம் தப்பிக்க தங்களை தனிமைப்படுத்துவது தான் ஒரே வழி. கூட்டம் கூடினால் மின்னல் வேகத்தில் பரவும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன. 


எனினும் மக்கள் அஜாக்கிரதையாக வெளியில் சுற்றினர். இதனால் மாநில அரசு 144 தடை உத்தரவை கையில் எடுத்துள்ளது.

இதுபற்றி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானதுமே சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தினர் ஒரே சமயத்தில் கூட்டமாக பஸ்களில் வீடு திரும்ப துவங்கினர். 


சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பயணிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. (இதை சமாளிக்க முன்கூட்டியே திட்டமிட்டு, தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி இருக்கலாம். ஆனால் இது போன்ற முயற்சிகளை எடுக்க அரசு தவறிவிட்டது).



பஸ்களில் அடித்துப்பிடித்து ஏறி நெருக்கடியில் பயணம் செய்தனர். இதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் கூட, பலரையும் பாதிக்கும். அவர்கள் மூலம் சமூகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.


இதனால் பஸ்சில் நெருக்கடி பயணம் செய்தவர்கள் தங்களை தற்காக்க வேண்டியது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று வார காலம் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். வெளியில் செல்லக்கூடாது. 


குடும்ப உறுப்பினர்களுடன் விலகி இருப்பதோடு, உடமைகளையும் தனியாக வைத்திருக்க வேண்டும். சிறு அறிகுறி தெரிந்தாலும் மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்.'சென்னையில் இருந்து தானே வந்தோம்' என அலட்சியம் காட்டினால் ஆபத்து நிச்சயம்.



 எனவே தயவு செய்து மூன்று வார வீட்டு தனிமையை கடைபிடியுங்கள்.பாதிப்புள்ள நாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு சுகாதாரத்துறை சொன்ன அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
SOURCE: DINAMALAR WEBSITE

No comments:

Post a Comment